
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
இந்த முயற்சி எதிர்வரும் தேர்தல்களின் போது ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
CATEGORIES Sri Lanka

