மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்கட்டடங்கள் பாரிய சேதம்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்கட்டடங்கள் பாரிய சேதம்

தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் நேற்றிரவு இரவு 6.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரம் ஜனவரி 2, 2026 அன்று காலை சுமார் 7:58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

500க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டதாக நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரேரோ (Guerrero) மாநிலத்தின் சான் மார்கோஸ் (San Marcos) நகருக்கு அருகிலும், சுற்றுலாத் தலமான அகாபுல்கோ (Acapulco) பகுதிக்கு அருகிலும் மையம் கொண்டிருந்தது.

எகபுல்கோவைச் சுற்றியும், மாநிலத்தின் பிற நெடுஞ்சாலைகளிலும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக மாநில சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரேரோவின் தலைநகரான சில்பான்சிங்கோவில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கும் பாரிய பெரும் சேதம் ஏற்பட்டதால் நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது ..

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம் (Claudia Sheinbaum) தனது புத்தாண்டின் முதல் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். நிலநடுக்க அபாய எச்சரிக்கை ஒலித்தவுடன், அவர் தனது உரையை பாதியில் நிறுத்திவிட்டு அரங்கிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் சேத விபரங்களை மதிப்பிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )