
‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் ப்ரோமோ வெளியானது
ஜீவாவின் 45 ஆவது படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ உருவாகி உள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ராஜேஷ் உடன் ஜீவா மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜேஷ் – ஜீவா கூட்டணியில் உருவான சிவா மனசுல சக்தி படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Cinema

