கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது

கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது

மொனராகலை மாவட்டம் தனமல்வில – கஹகுருல்லன்பெலஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (04) மாலை தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பலிபீடப் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 24, 26 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் தனமல்வில மற்றும் ஹம்பேகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )