
பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
கொழும்பு – பம்பலப்பிட்டி யில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத சடலமொன்று நேற்று (05) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர் எனவும், கருப்பு நிற சட்டை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

