தலைவர் தம்பி தலைமையில் வெளியீட்டுத் திகதியை அறிவித்த படக்குழு

தலைவர் தம்பி தலைமையில் வெளியீட்டுத் திகதியை அறிவித்த படக்குழு

ஜீவாவின் 45 ஆவது படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ உருவாகி உள்ளது. இப்படத்தி ‘Falimy’ படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வருகிற 30-ந்திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )