நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 597 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 597 பேர் கைது

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடளாவிய ரீதியில் நேற்று (07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 30,708 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் 597 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 25 பேரும் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 284 பேரும், திறந்த பிடியாணைகளின் கீழ் 225 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மதுபோதையில் வாகனம் செலுத்திய 460 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 57 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )