பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை புதுப்பித்துள்ளது. பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நேற்று (10) மாலை 4.00 மணி முதல் இன்று (11) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள்:

பதுளை மாவட்டம்:
பதுளை, ஹாலிஎல, பசறை, லுணுகல, வெலிமட, மீகஹகிவுல, கந்தகெட்டிய, ஊவா பரணகம

மாத்தளை மாவட்டம்:
அம்பகங்க கோரளை, உக்குவளை, லக்கல பல்லேகம, இரத்தோட்டை, வில்கமுவ

கண்டி மாவட்டம்:
மினிப்பே, உடுதும்புர

நுவரெலியா மாவட்டம்:
நிள்தண்டாஹின்ன, வலப்பனை, மத்துரட்ட, ஹங்குரக்கெத

மண்சரிவு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )