
சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்திய கோடாவுடன் சந்தேகநபர் கைது
தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெந்த பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (10) மாலை குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 1,620 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோனவில பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

