நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நியமனம்

நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளராக நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, அக்கட்சியின் உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் 2026 ஆம் ஆண்டிற்கான யாப்பின் 8.1.1(c) சரத்தின் கீழ், நவீன் திஸாநாயக்க இவ்வாறு உப தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், 2026 ஜனவரி 3 ஆம் திகதி முதல் அவரை சிரேஷ்ட உப தவிசாளராக பெயரிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் யாப்பின் 7.1(a) சரத்திற்கு அமைய, நவீன் திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )