
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மனு நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி, தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) நிராகரித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

