சஷீந்திர ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பொது சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில், சேதங்களுக்கான இழப்பீட்டு அலுவலகத்தில் பணிபுரியும் சில அரசு அதிகாரிகளை செல்வாக்கு செலுத்தி ரூ. 8,850,000/- இழப்பீடு பெற்று, “ஊழல்” மற்றும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )