ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு ; 16 பேர் பலி

ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு ; 16 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சிட்னி நகரின் போண்டி கடற்கரை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

விடுமுறை நாட்களில் பெருமளவு மக்கள் கூடும் இக்கடற்கரையில், நேற்று (14) திடீரென நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டை உலுக்கியுள்ளது.

கடற்கரையில் பொதுமக்கள் பொழுதைக் கழித்து கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் முதற்கட்ட தகவல்களின்படி 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )