புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய தேர்தல் ஆணைக்குழு அனுமதி

புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே பதிவிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டிற்கான புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் பின்னரே, குறித்த 5 அரசியல் கட்சிகளுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 83 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 47 கட்சிகள் ஆரம்ப நேர்முகத் தேர்வுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து நடத்தப்பட்ட இறுதி நேர்முகத் தேர்வுகளின் பின்னர், 5 கட்சிகளுக்கு பதிவிற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )