
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1950 ஆம் ஆண்டு இந்த நாளில், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது, இதன் மூலம் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குடியரசாக மாறியது. மிகப்பெரிய குடியரசு தின கொண்டாட்டங்கள் புதுதில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி இந்தியா முழுவதும் குடியரசு தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டும் முக்கிய தேசிய விழா வரலாற்று பெருமை மிக்க கர்தவ்ய பாதையில் நடைபெற உள்ளது.
அதற்கான பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்த இந்த நாளில், நாடு தன்னை முழுமையான இறையாண்மை கொண்ட, சமத்துவம் வலியுறுத்தும், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குடியரசாக உலகிற்கு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவை முன்னிட்டு அசத்தலான அணிவகுப்புகள், பல்வண்ண அலங்கார நிகழ்ச்சிகள் மற்றும் தேசபக்தி நிறைந்த கலைநிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
குடியரசு தினம் என்பது ஒரு சாதாரண நாளை விட அதிக அர்த்தம் கொண்டது; அது ஜனநாயகத்தின் வலிமை, அரசியலமைப்பின் மரியாதை மற்றும் தேசிய ஒற்றுமையின் பிரதிபலிப்பாகும்.

