
இந்தோனேசியாவில் கனமழை ; 25 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அந்த அனர்த்தத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலச்சரிவில் சிக்கி 80 பேர் வரை மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனர்த்த பகுதிகளுக்கு மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES World News

