
குடியரசு தினத்தையொட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
குடியரசு தினத்தை முன்னிட்டு, போர்களில் நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு இன்று (26) காலை சென்றார்.
அங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து குடியரசு தின அணிவகுப்பை அவர் பார்வையிட உள்ளார்.
CATEGORIES India

