
கத்தோலிக்க பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் ; 6 பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியல்
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக நீதிமன்றத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

