
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
78ஆவது தேசிய சுதந்திர தின விழா “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை கொழும்பு நகரில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 78ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளைச் சிறப்பாக முன்னெடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



