
உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை கடும் உயர்வு
உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் இஞ்சி ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் இஞ்சி சாகுபடிக்கு ஏற்பட்ட பெரும் சேதமே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகும். இதன் விளைவாக சந்தையில் இஞ்சி விநியோகம் குறைவடைந்துள்ளதாகவும், அதனால் விலை மேலும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

