பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி தாக்குதல் ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி தாக்குதல் ; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட குளவி தாக்குதலில் 8 பேர் பாதிக்கப்பட்டு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில் 6 மாணவர்களும் 2 பல்கலைக்கழக ஊழியர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கலஹா சந்திக்கு அருகிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தின் முன்புறத்தில் உள்ள பால் கடைக்கு அருகிலேயே இந்த குளவி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தப் பகுதியில் குளவி கூடு காணப்படாததால், அருகிலுள்ள பகுதிகளில் ஏதேனும் கூடு இருப்பின் அதை அகற்ற பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )