
ஹனி படத்தின் டிரெய்லர் வெளியானது
தமிழில் பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தனக்கென தனி இடத்தைப் பெற்ற நடிகர் நவீன் சந்திரா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘ஹனி’ வருகிற 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை கருணகுமார் இயக்கியுள்ளதுடன், திவ்யா பிள்ளை, திவி வத்யா, ராஜா ரவீந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ‘ஹனி’ படத்தின் டிரெய்லரை நடிகர் நவீன் சந்திரா தனது எக்ஸ் (X) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே தற்போது பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
CATEGORIES Cinema

