
உலகக் கிண்ணத்திலிருந்து விலகிய பாட் கம்மின்ஸ்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு–20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முதுகுப் பகுதி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் விலகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இறுதி 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் பென் டுவார்ஷுஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மத்தியூ ஷோர்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மெட் ரென்ஷோ குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் பிரதான குழாமில் இடம்பெறாவிட்டாலும், காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக அழைக்கப்படக்கூடியவர்களில் ஒருவராக உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக் குழாம்:
மிட்செல் மார்ஷ் (அணித்தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மெட் ரென்ஷோ, கமரன் க்ரீன், டிம் டேவிட், கிளென் மக்ஸ்வெல், கூப்பர் கொனோலி, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஜொஷ் ஹேசில்வூட், நாதன் எலிஸ், ஸேவியர் பார்ட்லெட், பென் டுவார்ஷுஸ், அடம் ஸாம்பா, மார்க் கூனுமென்.

