பீடி இலைகளுடன் ஒருவர் கைது

பீடி இலைகளுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று (01) காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 668 கிலோகிராம் பீடி இலைகள் அடங்கிய 18 பைகள் மற்றும் ஒரு கொப்ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )