
கங்காராம விகாரையின் நவம் மகா பெரஹெரவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்றார்
மத நல்லிணக்கம், கலாச்சாரம் மற்றும் தேசிய பாரம்பரியத்தை ஒன்றிணைக்கும் கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் நவம் மகா பெரஹெர நேற்று இரவு இரண்டாவது நாளாகவும் வீதி உலா வந்தன.
ஜனவரி 31 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளின் இரண்டாம் நாளான நேற்று, நவம் பூரணை போயா தினத்தையொட்டி உள்நாட்டு வெளிநாட்டு எடுத்துக்காட்டுகளுடனான அலங்கார அரங்கேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார விழுமியங்களை பறைசாற்றும் அம்சங்களுடன் வீதி உலா இடம்பெற்றன.
இந்த புண்ணிய நிகழ்வில், கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் அழைப்பின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பங்கேற்று, சமய அனுஷ்டானங்களில் கலந்துகொண்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதோடு, கங்காராம பெரஹராவையும் கண்டுகளித்தார்.




