மின்சார மோசடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 90 மில்லியன் ரூபாய் இழப்பு

மின்சார மோசடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 90 மில்லியன் ரூபாய் இழப்பு

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில், மோசடியாக மின்சாரம் பயன்படுத்திய தரப்புகளிடமிருந்து 90 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மின்சாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“90,242,561.21 ரூபாய் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பாகவும், 2,527,500.00 ரூபாய் நீதிமன்ற செலவுகளாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

மின்மீட்டர்களை மாற்றி மின்சாரம் பெற்றுக்கொண்ட 1,259 சம்பவங்களும், கொக்கிகள் பயன்படுத்தி அனுமதியின்றி மின்சாரம் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மோசடியாக மின்சாரம் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என குறித்த அறிக்கையில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், மின்சார மோசடி பயன்பாடு தொடர்பான தகவல்கள் வழங்க 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்தையோ அல்லது 1987 என்ற அவசர தொலைபேசி சேவையையோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் இலங்கை மின்சார வாரியத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் மேலாளர் (விசாரணைகள்) இந்திக பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )