லாஃப்ஸ் எரிவாயு 80 ரூபாய் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு 80 ரூபாய் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை நேற்று (6) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் காஸ் விலை 80 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதன் புதிய விலை 4,330 ரூபா ஆகும்.

5 கிலோ சிலிண்டர் காஸ் விலை 32 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,742 ரூபா ஆகும்.

உள்நாட்டு எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அமைய இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய விலைகள் நாடு முழுவதும் உள்ள நேற்று முதல் நடைமுறைக்கு வரும்வகையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )