பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

பங்களாதேஷில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த நோய் சர்வதேச அளவில் பரவும் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, பங்களாதேஷில் ராஜ்ஷாஹி மாகாணத்தைச் சேர்ந்த 40 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர், கடந்த ஜனவரி 28ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில், அவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி, பங்களாதேஷுக்கான சர்வதேச சுகாதார விதிமுறைகள் தொடர்பான தேசிய மையம், இந்த உறுதி செய்யப்பட்ட நிபா வைரஸ் மரணத்தை WHO-வுக்கு அறிவித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலும் இரண்டு நிபா வைரஸ் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து, சீனா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விமான நிலையங்களில் சுகாதார பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )