2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய விருதுகள் புலமைப்பரிசில் (Australia Awards Scholarships)இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றனபெண்கள், மாற்றுத்திறனாளிகள்,பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை

2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய விருதுகள் புலமைப்பரிசில் (Australia Awards Scholarships)இலங்கையர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றனபெண்கள், மாற்றுத்திறனாளிகள்,பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை

2027ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர விரும்பும் இலங்கை குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய விருதுகள் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் இந்தத் திட்டம், இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு ஆதரவளிப்பதையும், உயர்தர கல்வி மற்றும் சர்வதேச தொடர்புகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய உயர்கல்வி நிறுவனங்களில் பாடநெறி (Coursework) அல்லது ஆராய்ச்சி (Research) மூலமான முதுகலைப் பட்டப்படிப்புகள் (Master’s Degrees

காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு (Climate Change and Disaster Risk Reduction)

பொருளாதார மேம்பாடு (Economic Development)

உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை (Inclusive Growth and Stability)

கல்வி (Education)

ஆட்சி முறைமை (Governance)

பாலின சமத்துவம், ஊனமுற்றோர் மற்றும் சமூக உள்ளடக்கம் (GEDSI)

ஆகியன 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய விருதுகள் புலமைப்பரிசில் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமைப் பாடத்துறைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 3 வருட தொழில் அனுபவத்துடன் ஆஸ்திரேலிய இளங்கலை பட்டத்திற்கு இணையான தகுதியை விண்ணப்பதாரிகள் பெற்றிருத்தல் வேண்டும்.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் :

முழுமையான கல்விக்கட்டணம்.

இருவழி விமான பயணச்சீட்டு.

வாழ்க்கைச் செலவுகளுக்கான கொடுப்பனவு.

ஆரம்பக் குடியேற்றக் கொடுப்பனவு (Establishment allowance).

மாணவர் சுகாதாரக் காப்பீடு மற்றும் மேலதிக கல்வி ஆதரவு.

பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களிடமிரு விண்ணப்பங்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

அத்துடன் பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்:
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா.

விண்ணப்ப காலம்: பிப்ரவரி 1, 2026 முதல் ஏப்ரல் 30, 2026 வரை.

அனைத்து விண்ணப்பங்களும் ஆஸ்திரேலிய விருதுகளின் OASIS இணையதளம் ஊடாக ஒன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )