மன்னர் சார்லஸ் இன்று அமெரிக்கா பயணம்

மன்னர் சார்லஸ் இன்று அமெரிக்கா பயணம்

வெளிநாட்டு செய்திகளின்படி, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று (27) அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்கின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை புதுப்பித்து மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமாகும் என அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிறிஸ்டியன் டர்னர் தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு நாள் அரசுமுறைப் பயணம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆரம்பமாகிறது.

பயணத்தின் போது, வெள்ளை மாளிகையில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )