ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழுவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களை புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கலந்துரையாடல் மிகவும் சுமுகமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததுடன் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆழமான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடியின் போதும், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி பாதிப்பின் போதும் இந்தியா வழங்கிய உடனடி உதவிகள் குறித்து இந்த சந்திப்பில் நினைவு கூறப்பட்டது.

இந்தியாவின் ‘அயலகத்திற்கு முன்னுரிமை’ (Neighbourhood First) கொள்கை மற்றும் பிராந்திய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கைக்கான உண்மையான மற்றும் நம்பிக்கைக்குரிய பங்காளராக இந்தியா எப்போதும் விளங்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தத் தூதுக்குழுவினர் தற்போது புதுடெல்லியில் தங்கியுள்ளனர். இந்த சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் சமூக ரீதியிலான உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )