கண்டியில் நாளை 22 மணி நேர நீர்வெட்டு!

கண்டியில் நாளை 22 மணி நேர நீர்வெட்டு!

மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 22 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நீர்வெட்டு நாளை (8) காலை 06.00 மணி முதல் நாளை மறுநாள் (9) அதிகாலை04.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, அஸ்கிரிய, வேகிரிய, பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவா நீர்த்தேக்கம், மெதவல சேவா நீர்த்தேக்கம், கஹவத்த, குருகொட, புலுகொஹொதென்ன, நுகவெல, பலனகல, கலகெதர, மாவத்தகட ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

WATERCUT
WATERCUT
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )