சமிந்த குலரத்ன அளித்த புகார் ; இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

சமிந்த குலரத்ன அளித்த புகார் ; இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற துணைச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்த புகாரை விசாரிக்க அந்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட துணைச் செயலாளர் நாயகம், சபாநாயகருக்கு எதிராக இந்தப் புகாரை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சமீபத்தில் கூடிய இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையக் கூட்டத்தில் குறித்த புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட்டதுடன், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இடைநீக்கம் செய்யப்பட்ட திரு. சமிந்த குலரத்னவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் ஏற்கனவே பெறப்பட்டுள்ள மற்றொரு புகாரையும் விசாரிக்க அந்த ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )