பூக்கி படத்தின் டிரெய்லர் வெளியானது

பூக்கி படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

இதனிடையே, ‘பூக்கி’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ‘பூக்கி’ படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )