2026 ஆம் ஆண்டு இதுவரை நீர் விபத்துகளில் 24 பேர் பலி

2026 ஆம் ஆண்டு இதுவரை நீர் விபத்துகளில் 24 பேர் பலி

2026 ஆம் ஆண்டு இதுவரை இடம்பெற்ற நீர் விபத்துகளினால் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளை இலக்காகக் கொண்டு “உயிர்காக்கும் திட்டம்” ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் திரு. எஃப். யு. வுட்லர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

ஆறுகள், குளங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்கள் குறிப்பாக மழைக்காலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நீர் நிலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும், ஆபத்தான பகுதிகளில் நீராடுதல் மற்றும் அசாதாரண சாகசங்களில் ஈடுபடுதல் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ் வலியுறுத்தியுள்ளது.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )