
போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்ட7 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது
போதைப்பொருள் பாவித்த நிலையில் தனியார் பயணிகள் பஸ்களில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் பிலியந்தலை நகரூடாக பயணிக்கும் தனியார் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளனரா என சோதனையின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
இந்தச் சோதனைகள் பிலியந்தலை பிரதான பஸ் நிலையத்தில், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் விசேட பஸ் ஒன்றினுள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது சுமார் 170 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சோதனை நடவடிக்கை விபரங்கள்
நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்கள் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.இதன்போது ,
வீதி இல 120: கெஸ்பேவ – புறக்கோட்டை, வீதி இல 255: கல்கிசை – கொட்டாவ,வீதி இல 162: பிலியந்தலை – பண்டாரகம
வீதி இல 341: பிலியந்தலை – மகரகம, வீதி இல 341/2: கரதியான ஊடாக – மகரகம,வீதி இல 342: பிலியந்தலை – கொட்டாவ,வீதி இல 157: கஹபொல – பிலியந்தலை,
வீதி இல 157/1: பிலியந்தலை – மாகந்தன ஆகிய வீதிகளில் பயணிக்கும் பஸ்கள் சோதனையிடப்பட்டன.

