
அமெரிக்காவில் மாணவர் விடுதியில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் South Carolina State University எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கறுப்பின மாணவர் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி,
இந்த துப்பாக்கிச் சூடு நேற்று இரவு (12) Hugine Suites எனப்படும் மாணவர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு அறையில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் காயமடைந்த நபரின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

