
பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தசட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும்அவரது மனைவி நிசன்சலா
பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் ,
46 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவ ஆராச்சி மற்றும் 41 வயதுடைய
அவரது மனைவி நிசன்சலா என போலீசார்தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கறிஞர் வலல்லாவிட்ட, லேதொலாவத்த பகுதியைச் சேர்ந்தவர் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தரமுல்ல, அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பாக இன்று மாலை 5:00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காரின் முன் இருக்கையில் பயணித்த இவர்கள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இருவரும் காரினுள்ளேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் வெள்ளி நிற ‘Blue Bird’ ரக மோட்டார் காரில் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் இந்தக் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தலங்கம காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

