மரணச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டவரைக் கொலை செய்த மூவருக்கு மரண தண்டனை

மரணச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டவரைக் கொலை செய்த மூவருக்கு மரண தண்டனை

மரணச்சடங்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவரைக் கொலை செய்த மூவருக்கு ,களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் , மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

18 ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடா வஸ்கடுவ, லிட்டில்டன் வத்தை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார , ரலஹாமி என அழைக்கப்படுபம் சுகத் குமார , பெட்டா சமித சிசிர குமார ஆகியோருக்கு ந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடா வஸ்கடுவ லிட்டில்டன் வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவரே கொலை செய்யப்பட்டார்.

2008 அக்டோபர் காலப்பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது .

வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற ஒரு மரண வீட்டில் நின்ற சமிந்த குமார என்பவரை குறித்த மூவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட கால விசாரணையின் பின்னர் மூவருக்கும் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )