திங்கட்கிழமை இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

திங்கட்கிழமை இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரும் அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார்.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ‘டிட்வா’ சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவதானிக்கவுள்ளதுடன், இலங்கையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )