இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி

இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி

இலங்கையின் இரத்தின வளங்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி “Gem Sri Lanka 2026” (07) கொழும்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியது.

உலகளாவிய இரத்தினக்கல் கண்காட்சி மற்றும் ஆபரணத் துறையில் ஒரு மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இலங்கையின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாட்டின் மிகப்பெரிய இரத்தினக்கல் கண்காட்சி மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம், மூன்றாவது முறையாக இந்த முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி “Gem Sri Lanka 2026” ஐ ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் “Gem Sri Lanka 2026” சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சியில் 110 அரங்குகள் இடம்பெறும். அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இத்தாலி, இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா, ரஷ்யா மற்றும் ஜேர்ம​ே உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட முன்னணிகோள்வனவாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )