
இலஞ்சம் கோரிய தொழில்நுட்ப அதிகாரி கைது
வத்தளை பிரதேச சபையின் வெலிசறை உப செயலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரியொருவர் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டிடத் திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அந்தக் கட்டிடத்திற்கு அனுமதி வழங்குவதற்காக குறித்த அதிகாரி 50,000 ரூபாய் இலஞ்சம் கோரியதாக ஒருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

