சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு ; ஒருவர் கைது

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு ; ஒருவர் கைது

பொகவந்தலாவை – கிளினிவத்த பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை நேற்று (07) பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )