நைஜீரியாவில் சுரங்க விபத்து ; 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் சுரங்க விபத்து ; 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 38 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கத்தின் உள்ளே காா்பன் மோனாக்சைடு எனும் விஷவாயு கசிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாயு கசிவினால் திடீரென தீப்பற்றி வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், 38 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடுமையாக காயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கங்களில் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )