நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது – லிட்ரோ

நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது – லிட்ரோ

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயு பற்றாக்குறையும் ஏற்படாது என்றும், தேவைக்கு ஏற்ப போதிய அளவு கையிருப்பு இருப்பதாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்திடம் போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் தேவையற்ற பதற்றம் அல்லது பரபரப்பு உருவாக்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பெப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தினங்களில் ஏற்கனவே 2,84,000 உள்நாட்டு பயன்பாட்டு எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (19) முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரை மேலும் 3,51,000 உள்நாட்டு பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )