தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததுடன், கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்ப்பு தென் கொரிய அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுவதுடன், முன்னாள் அரசுத் தலைவருக்கு விதிக்கப்பட்ட கடுமையான தண்டனையாகவும் பார்க்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அந்நாட்டில் அரசியல் மற்றும் சட்டவியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )