
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 552 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 552 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 26,851 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 259 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 164 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 289 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 55 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

