தெவுந்தர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீன் வியாபாரி உயிரிழப்பு

தெவுந்தர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீன் வியாபாரி உயிரிழப்பு

கந்தர பொலிஸ் பிரிவின் தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கட்டுக்கு அருகில் இன்று (21) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிரில் ஹேந்தவிதாரண அல்லது ‘டிலைட்’ (Delight) என அழைக்கப்படும் 55 வயதுடைய மீன் வியாபாரி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சாம்பல் நிற காரில் வந்த ஒரு குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இருவர் இணைந்து 9 மி.மீ (9mm) ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகளால் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நிலையில், கந்தர பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )