
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; 17 வயது சிறுவன் பலி
தவலம – அகுரெஸ்ஸ பிரதான வீதியில் தவலம சந்திப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அகுரெஸ்ஸ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து எதிர் திசையில் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் பயணித்த இளைஞனும் விபத்தில் காயமடைந்து ஹினிதும மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக உடுகம மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார்.
காயமடைந்த பின்புற பயணி மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஹினிதும பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
CATEGORIES Sri Lanka

