
இலங்கை கெமா மையத்தின் கதிர்வீச்சு திறனை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது..
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அணுசக்திபையின் ஒரு பகுதியாக காணப்படும் இலங்கை கெமா மையத்தின் கதிர்வீச்சு திறனை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இது குறித்து ஆராய்வதற்காக, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன, அமைச்சின் அதிகாரிகளுடன், அண்மையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் நிறுவப்பட்ட மையத்தைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது, அமைச்சரும் அவரது குழுவினரும் கெமா மையத்தின் தற்போதைய நிலை மற்றும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கெமா கதிர்வீச்சு சேவைகளைக் கவனித்து, அதிகாரிகளுடன் வசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு

